சிரம்பான், ஆகஸ்ட் 29 - நேபாள வெள்ளத்தில் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் மலேசியர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு மற்றும் விளக்கமளிப்புக் கூட்டம் நாளை நடத்தப்படவிருக்கிறது.
அந்த விளக்கமளிப்புக் கூட்டம், விஸ்மா புத்ரா, தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சார்புடைய அமைப்புகள் ஆகியவற்றை உட்படுத்தியிருக்குமென வெளியுறவு அமைச்ச்ர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹாசான் தெரிவித்தார்.
காணாமல் போயிருக்கும் மலேசியர்களைத் தேடி மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகள் குறித்து அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்படுமென அவர் கூறினார்.
அதோடு, தேவை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நேபாளத்திற்கு செல்ல விரும்பினால் அதற்கான பயணத்தை ஏற்பாடுச் செய்யவும் விஸ்மா புத்ரா தயாராக இருக்கிறது.
எனினும், பாலங்கள் உட்பட தொடர்பு முறை பாதிக்கப்பட்டிருப்பதால், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவது மிகவும் கடினமென மொஹமட் ஹாசான் குறிப்பிட்டார்.
மம்பா, துவாங்கு கிளப் பூங்காவில், பொது மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.







