புகைமூட்டம்: கூச்சிங்கில் மலேசியத் தினம் உள்ளரங்கில் கொண்டாடப்படும்

2 செப்டெம்பர் 2026, 9:34 AM
புகைமூட்டம்: கூச்சிங்கில் மலேசியத் தினம்  உள்ளரங்கில் கொண்டாடப்படும்

ஷா ஆலாம், செப். 2: சரவாக், கூச்சிங்கில் எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டம், புகைமூட்டம் காரணமாக உள்ளரங்கில் நடத்தப்படும்.

இதை தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார்.

மலேசிய தினத்தின் முக்கிய நிகழ்வு செப்டம்பர் 16ஆம் தேதி மாலை கூச்சிங் போர்னியோ மாநாட்டு மையத்தில் (BCCK) நடைபெறவுள்ளது.

புகைமூட்டம் காரணமாக வெளிப்புற நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் நிகழ்ச்சி உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

சரவாக்கில் நிலவும் புகைமூட்ட நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும். செயற்கை மழை பொழிவு நடவடிக்கை மெட்மலேசியாவில் மதிப்பீட்டின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.

புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.