ஷா ஆலாம், செப். 2: இன்று காலை 7:37 மணி நிலவரப்படி, சிலாங்கூர், ஜோஹான் செத்தியாவில் காற்று மாசு குறியீடு (API) 161-ஆகப் பதிவாகியுள்ளது.
அம்மாநிலத்தில் மிக உயர்ந்த காற்று மாசு குறியீடு அளவு இதுவாகும்.
இதற்கிடையில், ஷா ஆலாம் மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் தலா 94 API-யும், அதனைத் தொடர்ந்து கிள்ளான் (93), கோலா சிலாங்கூர் (80) மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் (80) என API அளவுகள் பதிவாகியுள்ளன.
சரவாக் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. அங்கு செரியன் (322), கூச்சிங் (319) மற்றும் சமரஹான் (306) ஆகிய மூன்று இடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன.
மேலும், சபாவில் கோத்தா கினாபாலு பாலிடெக்னிக் 184 API-யைப் பதிவு செய்துள்ளது. கோத்தா கினாபாலு (178), கிமானிஸ் (174), கெனிங்காவ் (173), சண்டாக்கான் (152) மற்றும் தாவாவ் (130) ஆகிய இடங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளன.
மேலும், லாபுவான் பகுதியிலும் API ஆரோக்கியமற்ற நிலையில் (181 ) உள்ள அதே வேளையில் புத்ராஜெயாவில் 135 API பதிவாகியுள்ளது.
நெகிரி செம்பிலானில், நீலாய் 134 API-யையும், சிரம்பான் 108 API-யையும் பதிவு செய்துள்ளன.
கூடுதலாகக் கெடாவின் சுங்கை பெட்டானி அதிகபட்சமாக 96 API-யைப் பதிவு செய்துள்ளது.







