மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

2 செப்டெம்பர் 2026, 1:55 AM
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

கோலாலம்பூர், செப். 2: 17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்கள் (AHMM) மலேசியாவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளன.

இக்கூட்டங்கள் செப்டம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை “Healthy ASEAN: Together Towards Equitable, Future-Ready Health Systems” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக மலேசியா 22 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டு, பினாங்கில் நடைபெற்ற 7ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தது.

ஆசியான் நாடுகளின் சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், சுகாதாரச் சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை வகுக்கவும் இக்கூட்டம் முக்கிய தளமாக அமையும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.