2027-க்குள் 9,000 ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள்: சுகாதார அமைச்சர்

11 அக்டோபர் 2026, 12:00 PM
2027-க்குள் 9,000 ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள்: சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், அக். 11 — ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்களின் நீண்டகால வேலைவாய்ப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு மேலும் 4,500 நிரந்தரப் பணியிடங்களை உருவாக்கவுள்ளது.

இதன் மூலம் 2027ஆம் ஆண்டுக்குள் நிரந்தரப் பணியிடங்களைப் பெறும் ஒப்பந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 9,000ஆக அதிகரிக்கும்.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் இதனைத் தெரிவித்தார்.

எனினும், இந்த நிரந்தரப் பணியிடங்கள் ஒப்பந்த மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், மருந்தக அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் இதில் உள்ளடங்கமாட்டார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாகக் கலந்துரையாடப்படும் என்றும் சுல்கிஃப்லி கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் முதுநிலை மருத்துவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மருத்துவர்களுக்கு மருத்துவ அதிகாரிகளாக நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் 2027ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.

இதன் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் தொழில் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், அவர்களின் எதிர்காலப் பணிவாழ்க்கைக்கும் நிலையான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.