ஜூலையில் இந்தோனேசியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் முதலிடத்தில் மலேசியர்கள்

2 செப்டெம்பர் 2026, 1:00 AM
ஜூலையில் இந்தோனேசியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் முதலிடத்தில் மலேசியர்கள்

ஜகார்த்தா, செப்.2 : கடந்த ஜூலையில் இந்தோனேசியாவிற்குச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் மலேசியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

அந்த மாதத்தில் இந்தோனேசியாவுக்கு சென்ற 15.3 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், சுமார் 15 விழுக்காட்டினர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதாவது 2,28,710 மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளனர் என இந்தோனேசியாவின் மத்திய புள்ளியியல் அமைப்பான BPS தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மலேசியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூலையில் சுமார் 1,88,250 ஆஸ்திரேலியர்கள் இந்தோனேசியாவுக்கு பயணம் செய்துள்ளனர். இது மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 12.34 விழுக்காடாகும்.

அதேவேளை, சீனாவிலிருந்து 1,56,750 பேர் இந்தோனேசியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது 10.28 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது

இந்தோனேசியாவுக்கு அதிகம் பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் மலேசியர்கள் முதலிடத்தில் இருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மக்கள் தொடர்புபை எடுத்துக்காட்டுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.