கோலாலம்பூர்,செப்டம்பர் 1 - மலேசியாவின் 'ஸ்மார்ட்' தேடி- மீட்கும் சிறப்பு பேரிடர் உதவிக் குழுவினர் இன்னும் நேபாள அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.
நேபாள தரப்பிலிருந்து இதுவரை எந்தவோர் பதிலும் கிடைக்கவில்லை என ஸ்மார்ட் மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் (PgKB 1) அப்துல் மானாஃப் ச்செ இசா தெரிவித்தார்.
எனினும் ஸ்மார்ட் குழுவினர் அனுமதி கிடைத்தவுடன் எந்நேரமும் புறப்படும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
நேபாள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் நிலை குறித்து இதுவரை தெரிய வராத நிலையில், அந்நாட்டிற்கு ஸ்மார்ட் குழுவினரை அனுப்பி வைக்க மலேசியா முடிவெடுத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.







