கோலாலம்பூர், செப் 1 - தேசியப் பதிவுத் துறை, நடப்பில் இருக்கும் மைகார்ட் அட்டையிலிருந்து புதிய தலைமுறைக்கான மைகார்ட் அட்டைக்கு மாறும் நடைமுறையில் உள்ளது. அதையடுத்து மைகார்ட் அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும்.
அந்த அச்சு இடையூறு இன்று தொடங்கி ( செப். 1 ) செப்டம்பர் 7 வரை நீடிக்குமென அத்துறை தெரிவித்தது.
ஆக, மைகார்ட் அட்டையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லாதவர்கள், தற்போதைக்கு அத்தகைய நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு அத்துறை அறிவுறுத்தியது.
அதோடு, 12 வயதை எட்டியத் தங்களது பிள்ளைகளுக்கு முதல் முறையாக மைகார்ட் விண்ணப்பிக்கும் பெற்றோர்களும், தங்களது முடிவை சற்று ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் வழி சிறுவர்கள் புதிய தலைமுறைக்கான மைகார்ட் அட்டையைப் பெற முடியும்.







