தேசியத் தினக் கொண்டாட்டம் வெற்றிகரமாக அமைந்தது : நன்றிக் கூறிய பாஹ்மி

31 ஆகஸ்ட் 2026, 3:33 PM
தேசியத் தினக் கொண்டாட்டம்  வெற்றிகரமாக  அமைந்தது :  நன்றிக் கூறிய பாஹ்மி
தேசியத் தினக் கொண்டாட்டம்  வெற்றிகரமாக  அமைந்தது :  நன்றிக் கூறிய பாஹ்மி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31- சுதந்திர தினக் கொண்டாட்டம் வெற்றிகரமாக நடைபெற கடுமையாக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ பாஹ்மி பட்சில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கொண்டாட்டத்தின் தயார் நிலையிலிருந்து இறுதி வரை பங்கேற்றப் பணியாளர்கள், பங்கேற்பாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள் , தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் அவர் பாராட்டினார்.

படம் : அமைச்சர் பாஹ்மி பட்சில் பேஸ்புக் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது

"புத்ராஜெயாவிற்கு நேரடியாக வந்தும், வீட்டிலிருந்தும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் கண்டு களித்த லட்சக்கணக்கான மலேசியர்கள் அனைவருக்கும் எனது நன்றி " என ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

மக்களின் வருகை , கொண்டாட்டத்தை மேலும் அர்த்தமாக்கியது. திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட ஊழியர்கள் , கொண்டாட்டம் சுமுகமாக நடந்தேற உதவிய வீரர்கள் எனவும் அவர் வர்ணித்தார்.

படம் : அமைச்சர் பாஹ்மி பட்சில் பேஸ்புக் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது

தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம் அந்த நன்றியத் தெரிவித்துக் கொண்ட ஃபாஹ்மி, நாம் நேசிக்கும் இந்த மலேசியா தொடர்ந்து சுபீட்சத்துடன் நீடித்திருக்க வேண்டுமென வேண்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.