கோலாலம்பூர்: இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிரசரானா (Prasarana) நிறுவனம் தனது பொதுப் போக்குவரத்துச் சேவைகளை 24 மணி நேரமும் இடைவிடாமல் இயக்குமென அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
"தேசிய தினத்தை ஒட்டி 24 மணி நேர பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்க பிரசரானா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் அதிகமான மக்கள் புத்ராஜெயாவிற்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

இங்கு, பந்தாய் டாலாமில் உள்ள பெட்ரோனாஸ் NPE (Petronas NPE Pantai Dalam) தளத்தில் நடைபெற்ற ஜாலூர் கெமிலாங் நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் ஃபஹ்மி இதனைத் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டின் மலேசியா தினக் கொண்டாட்டம் (Malaysia Day ) சரவாக், கூச்சிங்கில் உள்ள போர்னியோ கலாச்சார மையத்தில் நடைபெறும் என்பதை ஃபஹ்மி உறுதிப்படுத்தினார்.







