ஜகார்த்தா, ஆகஸ்ட் 31: இந்தோனேசியாவின் அமைந்துள்ள சினாபுங் எரிமலை இன்று காலை வெடித்துச் சிதறியது. எரிமலைச் சாம்பல் சுமார் 3.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.17 மணியளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தடுப்பு மையமான PVMBG தெரிவித்துள்ளது.
அடர்த்தியான கறுப்பு நிற எரிமலைச் சாம்பல் மேகங்கள் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்துள்ளன.
சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சினாபுங் எரிமலை கடந்த காலங்களிலும் வெடித்து சிதறியுள்ளது. தற்போதைய நிலைமையை இந்தோனேசிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.







