இந்தோனேசியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெடித்த இரு எரிமலைகள்

29 ஜூன் 2026, 6:54 AM
இந்தோனேசியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெடித்த இரு எரிமலைகள்

ஜகார்த்தா, ஜூன் 29: இந்தோனேசியாவின் இரண்டு எரிமலைகளான கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு எரிமலையும் (Mount Semeru), கிழக்கு நுசா தெங்காராவில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலையும் (Mount Lewotobi Laki-laki) ஞாயிற்றுக்கிழமை அன்று பல முறைகள் வெடித்துச் சிதறியுள்ளன.

இந்த எரிமலை வெடிப்புகளின் காரணமாக அவற்றின் சிகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் மேகங்கள் வான்நோக்கி சீறிப் பாய்ந்துள்ளதாக அந்நாட்டின் புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செமேரு எரிமலை மட்டும் ஒரே நாளில் ஐந்து முறை வெடித்துள்ள நிலையில் லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஒரே நாளில் ஆறு முறை வெடித்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தியுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.