புத்ராஜெயா, ஆகஸ்ட் 30: சட்டவிரோத நடவடிக்கைகள் எதிரான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும் நாட்டின் நிதி, மக்களுக்கே மீண்டும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இவை சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னர் மக்களுக்கே மீண்டும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் மேம்பாட்டுக்கு அந்த நிதி முன்னுரிமை அடிப்படையில் திருப்பி வழங்கப்படும்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026 தேசிய தின பிரதமரின் உரையின் போது இது தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமே சுதந்திரம் அல்ல. நாட்டின் வளங்கள் அனைத்து மக்களுக்கும் நியாயமான முறையில் சென்றடைவதே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.







