ஷா ஆலாம், ஆகஸ்ட் 30: 'BUDI95' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை மாதத்திற்கு 300 லிட்டராக அரசு மீண்டும் அதிகரிக்கும். இதில் ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள்.
இதற்கு முன்னதாக ஒதுக்கீடு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.
புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) இன்று நடைபெற்ற தேசிய தின உரையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டீசல் வாகன உரிமையாளர்கள் மாதத்திற்கு 400 லிட்டர் வரையிலான 'BUDI Diesel' மானியத்தைப் பெறத் தகுதி பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த மாற்றம் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.






