தனிநபருக்குச் சொந்தமான வாகனங்களும் டீசல் உதவித் தொகை; நிதியமைச்சு

27 ஜூன் 2026, 2:20 AM
தனிநபருக்குச் சொந்தமான வாகனங்களும் டீசல் உதவித் தொகை; நிதியமைச்சு

ஷா ஆலாம், ஜூன் 27 - தனிநபருக்குச் சொந்தமான வாகனங்களும் இன்று தொடங்கி 2 ரிங்கிட் 15 சென் உதவித் தொகை பெற்ற டீசல் எரிபொருளைப் பயன்படுத்த முடியும்.

இன்று முதல் தீபகற்ப மலேசியாவில் உள்ள வாகனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் வேளையில், ஜூலை முதல் நாடு தழுவிய நிலையில் தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்கள் 2 ரிங்கிட் 10 சென் விலையில் இந்த உதவித் தொகைப் பெற்ற டீசலைப் பயன்படுத்த முடியும்.

டீசல் உதவித் தொகை திட்டத்தின் விரிவுப்படுத்தப்பட்ட சலுகைகளில் இந்த நடவடிக்கை அடங்கும்.

மேலும்,

டீசல் வாகன உரிமாயாளர் பெயரை மாற்றும் கட்டணத்திற்கு 3 மாதங்களுக்கு விலக்கு தரப்படும்

டீசல் வாகனத்தைப் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்களும் உதவித் தொகை பெற்ற டீசலைப் பெறுவது

குடும்ப உறுப்பினர்களையும் இணைக்க வாகன பதிவில் விபரங்களைப் புதுப்பிப்பது

நிறுவனத்துக்குச் சொந்தமான பிக்அப் டிரக், டீசல் வாகனங்களைப் பயன்படுத்தும் தனிநபர்களுக்கும் இந்த டீசல் உதவித் தொகையை விரிவுப்படுத்துவது

ஆகியவையும் இந்த புடி( BUDI) டிசல் திட்டத்தின் புதிய சலுகைகளில் அடங்குமென நிதியமைச்சு தெரிவித்தது.

தகுதியானவர்கள் இந்த சலுகைகளை முறையாக விரைந்து பெறுவதற்கு ஏதுவாக சாலை JPJ போக்குவரத்து துறை, ஜூலை 4 தொடங்கி ஜூலை 26 வரை அனைத்து மாநிலங்களிலும், UTC நகர்புற உருமாற்று மையங்களிலும் உள்ள தனது அலுவலகங்களை வார இறுதி நாட்களிலும் காலை மணி 8 முதல் மாலை மணி 5 வரை திறந்திருக்கும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.