காற்றுத் தூய்மைக் கேடு 150 தாண்டினால் செயற்கை மழைப் பொழிவு

30 ஆகஸ்ட் 2026, 7:47 AM
காற்றுத் தூய்மைக் கேடு 150 தாண்டினால் செயற்கை மழைப் பொழிவு

செர்டாங், ஆகஸ்ட் 30 - செயற்கை மழைப் பொழிவு, காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீடு 150-ஐத் தாண்டும் பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

புகை மூட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளில், Nadma - தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு, மலேசிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் இராணுவப் படை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு செயற்கை மழையைப் பொழிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

செர்டாங்கில், விவசாயக் கண்காட்சியில் கிராம தொழில்முனைவோர் பகுதியைத் திறந்து வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, சில அணைக்கட்டுகளிலும் , நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைந்திருப்பதை அடுத்தும் செயற்கை மழைப் பொழிவு அவசியமாகிறது எனவும், Nadma அமைப்பின் தலைவருமான அவர் கூறினார்.

நாட்டில் ஒரே இரவில், எல்லை கடந்த புகை மூட்டத்தால், நாட்டின் 20 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மோசமாகப் பதிவானது. அதில் சரவாக்கிலேயே காற்று மாசுபாடு மோசமடைந்திருந்தது.

சரவாக், செரியான் போலீஸ் தலைமையகத்தில் காற்றின் தரக் குறியீடு 364-ஆக பதிவாகியிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.