நேபாள வெள்ளம்: 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை

29 ஆகஸ்ட் 2026, 10:10 AM
நேபாள வெள்ளம்: 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக தொடர்புகொள்ள முடியாதவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்த இரு மலேசியர்கள் தற்போது தொடர்புகொள்ளப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.

நேபாளத்தில் உள்ள மலேசியத் தூதரகம், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் அவசர நடவடிக்கைக் குழு, நேபாள சுற்றுலா வாரியம், பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

எனினும், இதுவரை பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலின் அடிப்படையில், மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களில் மலேசியர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களும், அவர்கள் தொடர்பான தகவல் வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களும் வெளியுறவு அமைச்சின் செயல்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம்.

வெளியுறவு அமைச்சின் செயல்பாட்டு அறை தொலைபேசி எண்: +603 8887 4570 மின்னஞ்சல்: dutyofficer@kln.gov.my

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.