வெள்ளப் பேரிடர்: பருவநிலை இழப்பீடு கோரும் நேபாள அரசு

3 செப்டெம்பர் 2026, 6:01 AM
வெள்ளப் பேரிடர்: பருவநிலை இழப்பீடு கோரும் நேபாள அரசு

இஸ்லாமாபாத், செப். 3: அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவுக்கு நிவாரண உதவிகள் தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மாறாக பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வேண்டும் என நேபாளம் அதிரடியாக கூறியுள்ளது.

அந்நாட்டின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மிக குறைவாகும் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்கான நேபாளத்தின் பங்களிப்பு உலகளவில் மிகவும் குறைவாக இருந்தாலும், அதன் விளைவுகளை அந்நாடு கடுமையாக எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இமயமலைத் தொடரைப் பாதுகாப்பது நேபாளத்தின் பொறுப்பு மட்டுமாக இருக்கக்கூடாது. அதற்கான நடவடிக்கைகள் உலகளாவிய முயற்சியாக அமைய வேண்டும் எனவும் ஷிஷிர் கானல் அறிவுறுத்தினார்.

இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் பனிப்பாறை உருகுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய இயற்கைப் பேரிடர் அபாயங்கள், பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் சவால்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக நேபாளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.

நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்வதேச நாடுகளிடமிருந்து

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடாக

சமூகத்திடமிருந்து கிடைக்கும் ஆதரவு வெறும் நிவாரண உதவியாக இல்லாமல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடாக அமைய வேண்டும் என்று நேபாளம் வலியுறுத்தியுள்ளது.

இது வெறுமனே உதவி வழங்கும் விவகாரம் அல்ல என்றும், “நீதி மற்றும் சமத்துவம்” தொடர்பான பிரச்சினை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,225 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சீனாவில் 541 பேர் உட்பட கிட்டத்தட்ட 4,757 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் 1,204 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நேபாளம் அதன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் அளவுக்கு அதிகமாக எதிர்கொண்டு வருவதாக ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.

CNN தொலைக்காட்சியின் ‘Anderson Cooper 360°’ நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் நேபாளத்தின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகக் கூறினார்.

“எங்களுடைய மொத்த கார்பன் தடமும் பசுமை இல்ல வாயு வெளியேற்றமும் 0.1 விழுக்காட்டில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.

“ஆனால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. நிரந்தரமாக உறைந்திருக்கும் நிலப்பகுதிகளும் உருகுகின்றன. இதனால் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் ஏற்படும் அபாயமும் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய பேரிடரிலும் பனிப்பாறை ஒன்று உடைந்து சரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றத்திற்கான நேபாளத்தின் பங்களிப்பு உலகளவில் மிகவும் சொற்பமானதாக இருந்தாலும், அதன் விளைவுகளை அந்நாடு கடுமையாக எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.

“காலநிலை மாற்றத்திற்கு எங்களுடைய பங்களிப்பு கிட்டத்தட்ட முக்கியத்துவம் அற்ற அளவில்தான் உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இமயமலைத் தொடரைப் பாதுகாப்பது நேபாளத்தின் பொறுப்பு மட்டுமாக இருக்கக்கூடாது என்றும், அதற்கான நடவடிக்கைகள் உலகளாவிய முயற்சியாக அமைய வேண்டும் என்றும் ஷிஷிர் கானல் வலியுறுத்தினார்.

இமயமலைத் தொடரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், அதன் தாக்கம் இன்று நேபாளத்தில் தென்பட்டாலும் சீனாவையும் பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகள் இறுதியில் இந்தியாவை நோக்கிப் பாய்வதுடன், சில ஆறுகள் வங்காளதேசத்தையும் சென்றடைகின்றன. இதனால், இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்கான நன்னீர் வளத்தை இமயமலை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தை வெறுமனே தர்ம உதவி அல்லது நன்கொடை வழங்கும் நடவடிக்கையாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் கூறினார்.

CNN நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பர், வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேபாளம் எதிர்பார்க்கும் ஆதரவு வெறும் நிவாரண உதவியாக அல்லாமல் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடாகக் கருதப்பட வேண்டுமா என்று கேட்டபோது, ஷிஷிர் கானல் அதனை உறுதிப்படுத்தினார்.

“நிச்சயமாக. இது நீதி மற்றும் சமத்துவத்தின் கோணத்தில் பார்க்கப்பட வேண்டும்.

“காலநிலை மாற்றத்திற்கு எங்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கும்போது, நேபாள மக்களும் இமயமலைப் பகுதியில் வசிக்கும் மக்களும் அதன் சுமையைச் சுமக்க வேண்டிய நிலை எந்த அளவுக்கு நியாயமானது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அண்மைய பேரிடர் காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமா என்று கூப்பர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த கானல், அதற்கான ஆதாரங்கள் இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் பனிப்பாறை உருகுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய இயற்கைப் பேரிடர் அபாயங்கள், காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் சவால்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக நேபாளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.