8 புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன; மேலும் 3 செப்டம்பரில் திறக்கப்படும்: கல்வி துணையமைச்சர்

28 ஆகஸ்ட் 2026, 8:58 AM
8 புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன; மேலும் 3 செப்டம்பரில் திறக்கப்படும்: கல்வி துணையமைச்சர்

கூலாய், ஆகஸ்ட் 28: இந்த ஆண்டு ஐந்து மாநிலங்கள் மற்றும் புத்ராஜெயாவில் மொத்தம் 11 புதிய பள்ளிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில் எட்டு பள்ளிகள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், ஜோகூரில் மேலும் மூன்று பள்ளிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வோங் கூறினார்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில் கல்வி வசதிகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதுடன் மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை வழங்குவதற்கும் இப்புதிய பள்ளிகளின் கட்டுமானம் உதவும் என அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.