ஷா ஆலம், ஆகஸ்ட் 28: பேராக், கெரிக் அருகிலுள்ள தெமெங்கோர் பகுதியில் இன்று அதிகாலை 12.06 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை, MetMalaysia வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, உலு பேராக் பகுதியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் வடகிழக்கே கண்டறியப்பட்டதாகவும் அத்துறை கூறியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கெரிக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதமோ அல்லது உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் பதிவாகவில்லை.
நிலவரத்தை MetMalaysia தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







