கரையான் அரித்த கின்ராரா வீட்டிற்கு சிலாங்கூர் பிரிஹாத்தின் திட்டத்தின் மூலம் உதவி

26 ஆகஸ்ட் 2026, 1:35 AM
கரையான் அரித்த கின்ராரா வீட்டிற்கு சிலாங்கூர் பிரிஹாத்தின் திட்டத்தின் மூலம் உதவி

ஷா ஆலாம், ஆகஸ்ட் 26: கின்ராரா பகுதியில் கரையான்களால் சேதமடைந்த வீடொன்றின் கூரையைச் சீரமைக்க, சிலாங்கூர் பிரிஹாத்தின் திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது.

வீட்டின் கூரையைச் சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுத் தருமாறு இந்திய சமூகத் தலைவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டதாகக் கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் சீ ஹான் தெரிவித்தார்.

வீட்டின் கூரை கரையான்களால் சேதமடைந்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான சூழலில் வசிப்பதை உறுதி செய்ய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன், மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகமும் இணைந்து செயல்பட்டதாக இங் சீ ஹான் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம், சீரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, வீட்டு சீரமைப்புப் பணிகளை இங் சீ ஹான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

சம்பந்தப்பட்ட குடும்பம் விரைவில் பாதுகாப்பான மற்றும் வசதியான வீட்டில் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.