ஷா ஆலம், ஜூன் 24: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கின்ராரா வட்டாரப் பொதுமக்களுக்குச் சட்ட விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க, இலவசச் சட்ட ஆலோசனைக் முகாம் (Klinik Guaman Percuma) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் இளைஞர் ஊக்கவிப்பாளர் அமைப்பு (PeBS) மண்டலம் 9 மற்றும் 'மெஸர்ஸ் யாப், கூ & கோ' (Messrs Yap, Ku & Co) சட்ட நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது என கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியலான பிரச்சனைகள் குறித்து தகுதிவாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து நேரடியாகச் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முகாம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்த இலவச சட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் முன்கூட்டியே பதிவு செய்வதன் (Appointment) அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும் என்பதால், பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள (https://forms.gle/qtckB82sxwJDyDHNA) முகவரி வழியாகத் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தாமான் ஸ்ரீ பூச்சோங் சமூகக் கூடத்தில் (Dewan Komuniti Taman Sri Puchong) நடைபெறவிருக்கிறது.







