சிலாங்கூருக்கு இறுதி தங்கத்தைப் பரிசளித்தனர் சிலம்ப வீரர்கள்

24 ஆகஸ்ட் 2026, 10:50 AM
சிலாங்கூருக்கு இறுதி தங்கத்தைப் பரிசளித்தனர் சிலம்ப வீரர்கள்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 24 - சிலம்பம் போட்டியின் மூலம் கிடைத்தத் தங்கப் பதக்கத்தோடு, 2026 சுக்மா விளையாட்டுப் போட்டியிலிருந்து சிலங்கூர் அணி அதன் இனியப் பயணத்தை முடித்துக்கொண்டது.

செர்டாங் எம்பிஎஸ்ஜே ( MBSJ ) அரங்கில் நடைபெற்ற கலப்பு ஆயுதமில்லா தாள முறைப் பிரிவில் சிலாங்கூர் சிலம்பம் அணி தங்கம் வென்றது.

சுக்மா போட்டிகள் நிறைவை எட்டுவதற்கு முன்பு சிலாங்கூர் வென்ற இறுதி தங்கப் பதக்கம் அதுவாகும்.

வெனிஷா சரவணன், சஸ்மித்தா ரவி, ரோசலின் அனுஸ்கா டேவிட் ராஜ், ஷர்வீன்ராஜ் செல்வம், பிரதீஷ் அன்புச்செல்வன் இணைந்து களமிறங்கிய அணி அந்த வெற்றியைப் பதிவுச் செய்தது .

ஆயுதமில்லா கலப்புத் தாளப் பிரிவில் பங்கேற்ற சிலம்ப வீரர்கள் 24 ஆகஸ்ட் 2026. படம் : மீடியா சிலாங்கூர்

இப்பிரிவில் பேராக் வெள்ளிப் பதக்கத்தையும், திரெங்கானு வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

இதனிடையே , ஆயுதத்துடன் கூடிய கலப்பு தாளப் பிரிவில் சிலாங்கூர் வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடியது.

தாரணி ஷன்முகம், கிரன்ஜென்னிஃபீர் டான்சில், சஞ்சய் சிவபாலன் , சர்வேஷா முரளி , ஸ்ரீ ராஜ் சங்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பதக்கத்தைத் தங்களது வசமாக்கினர்.

சிலம்பப் போட்டியின் நடுவர்கள் . 24 ஆகஸ்ட் 2026. படம் - மீடியா சிலாங்கூர்

இப்பிரிவில் தங்கம் திரெங்கானு மாநிலத்திற்கும், வெண்கலம் ஜோகூருக்கும் சொந்தமானது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.