தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை

21 ஆகஸ்ட் 2026, 4:26 PM
தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை
தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை
தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை
தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை
தங்கப் புதையலான நீச்சல் குளம் : சுக்மா பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை

ஷா ஆலம், ஆகஸ்ட் 21: 2026 சுக்மா போட்டிகள் நிறைவடைய இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன.

இந்நிலையில், இன்று இரவு 10:30 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மாநிலம் 60 தங்கம், 51 வெள்ளி மற்றும் 43 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த பதக்க எண்ணிக்கை, உபசரணை மாநிலமான சிலாங்கூரைப் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முன்னணி வகிக்கவும் செய்துள்ளது.

திராங்கானு மாநிலம் 34 தங்கம், 32 வெள்ளி மற்றும் 27 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கூட்டரசு பிரதேசம் 31 தங்கம், 32 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இவ்வேளையில், நீச்சல் குளம் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்திற்கான 'தங்கப் புதையல்' என்பதை நிரூபித்திருக்கின்றது.

இன்று இரவு வரை, நீச்சல் மற்றும் முக்குளிப்பு போட்டிகளில் இருந்து மட்டும் 24 பதக்கங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்றைய போட்டியில், சிலாங்கூரின் முக்குளிப்பு வீரர் முகமது ஹாரிஸ் முகமது ரிசால் (Muhammad Haris Mohd Rezal), தனது கடைசி சுக்மா போட்டியில் பங்கேற்று, 1 மீட்டர் ஸ்பிரிங்போர்டு (springboard) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

சிலாங்கூர் முக்குளிப்பு வீரர் முஹம்மட் ஹாரிஸ் ஆடவருக்கான 1 மீட்டர் ஸ்பிரிங்போர்ட் பிரிவில் தங்கம் வென்றார் : படம் - பெர்னாமா

21 வயதான இந்த வீரர், கூட்டரசு பிரதேசத்தின் தேசிய அளவிலான முக்குளிப்பு வீரர்களான நூர் கய்யும் நஸ்மி முகமது நாசிம் மற்றும் யோங் ரூய் ஜியே ஆகிய இருவருக்கும் அதிர்ச்சியளித்து இந்த வெற்றியைப் பெற்றார்.

இது தவிர, 1 மீட்டர் ஸ்பிரிங்போர்ட், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை (butterfly), பெண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் (freestyle) மற்றும் பெண்களுக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆகிய பிரிவுகளின் மூலமாகவும் சிலாங்கூருக்கு தங்கம் பதக்கங்கள் குவிந்தன .

4x100 மீட்டர் ஃபிரிஸ்டைல் பிரிவில் சிலாங்கூர் மகளிர் அணி தங்கம் வென்றதோடு சுக்மா சாதனை நேரத்தையும் முறியடித்தனர். படம் -மீடியா சிலாங்கூர்

சிலாங்கூர் மாநிலத்தின் இளம் பெண் நீச்சல் வீராங்கனை ஷானன் டான் யான்-கிங் (Shannon Tan Yan-Qing), பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் புதிய சுக்மா சாதனையைப் படைத்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

16 வயதான அவர், 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சிலாங்கூர் அணி புதிய சுக்மா சாதனையை முறியடிப்பதற்கும் உதவியாக இருந்தார்.

ஷன்னோன் தன் யாங் கிங் பெண்கள் பட்டெர்ஃபிலாய் பிரிவில் சுக்மா சாதனை நேரத்தை புதுப்பித்தார் . அந்த சாதனை நேரம் திரையில் காண்பிக்கப்பட்டது-படம் மீடியா சிலாங்கூர்

ஷானன் முதலில் பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் 2 நிமிடம் 15.13 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றியாளர் ஆனார். இதன் மூலம், இன்று காலை நடந்த தகுதிச் சுற்றில் அவரே படைத்திருந்த 2:15.77 என்ற முந்தைய சுக்மா சாதனையை முறியடித்தார்.

தங்கப் பதக்கத்துடன் சிலாங்கூர் நீச்சல் வீராங்கனை ஷன்னோன் தன் யங் கிங் : படம் -மீடியா சிலாங்கூர்

தொடர்ந்து, இந்த 16 வயது வீராங்கனை, பெண்களுக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சிலாங்கூர் அணி 3 நிமிடம் 54.54 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வெல்ல உதவினார். இதுவும் இதற்கு முந்தைய 3:54.84 விநாடிகள் என்ற போட்டி சாதனையை மாற்றியமைத்தது.

இன்று வென்ற இரு தங்கப் பதக்கங்களுடன் , ஷானன் (Shannon) மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்பு அவர் பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி (individual medley), பெண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லி மற்றும் 4x100 மீட்டர் கலப்பு மெட்லி (mixed medley) ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.