2026 சுக்மா சிலம்பம்: சிலாங்கூர் அணி 2 தங்கம், 1 வெண்கலத்துடன் கம்பீர வெற்றி

22 ஆகஸ்ட் 2026, 7:41 AM
2026 சுக்மா சிலம்பம்: சிலாங்கூர் அணி 2 தங்கம், 1 வெண்கலத்துடன் கம்பீர வெற்றி
2026 சுக்மா சிலம்பம்: சிலாங்கூர் அணி 2 தங்கம், 1 வெண்கலத்துடன் கம்பீர வெற்றி
2026 சுக்மா சிலம்பம்: சிலாங்கூர் அணி 2 தங்கம், 1 வெண்கலத்துடன் கம்பீர வெற்றி
2026 சுக்மா சிலம்பம்: சிலாங்கூர் அணி 2 தங்கம், 1 வெண்கலத்துடன் கம்பீர வெற்றி

ஸ்ரீ கெம்பாங்கான் , ஆகஸ்ட் 22 - 2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில், சிலம்ப வீராங்கனை சஸ்மிதா ரவி (Sasmita A. Ravi) உபசரணை மாநிலமான சிலாங்கூருக்கு தங்கப் பதக்கத்தைப் பரிசளித்தார்.

செர்டாங் ஜெயாவில் உள்ள எம்.பி.எஸ்.ஜே அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான சிலம்பம் தனிநபர் குத்துவரிசை பிரிவில், சஸ்மிதா 10.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

போட்டி முழுவதும் சஸ்மிதா தனது கவனத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தினார். மேலும், அவரது அசைவுகள் மிகவும் கூர்மையாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்ததால் சிறப்பான ஆட்டத்தை இறுதிவரை சீராக அவரால் தக்கவைக்க முடிந்தது.

சிலாங்கூர் சிலம்ப வீராங்கனை சஸ்மித்தா எ. ரவி மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். படம் - மீடியா சிலாங்கூர்

இவரின் இந்த வெற்றி சுக்மா சிலம்பப் போட்டிகளின் மூலமாக சிலாங்கூரின் பதக்க எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவியது.

இன்று நடைபெற்ற சிலம்பப் போட்டிகளின் வாயிலாக , விளையாட்டு வீரர்கள் சிலாங்கூருக்கு 2 தங்கம், 1 வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தனர்.

முன்னதாக , ஆண்களுக்கான சிலம்பம் குத்துவரிசை தனிநபர் பிரிவில் சிலாங்கூர் மாநில வீரர் பிரதீஷ் அன்புசெல்வன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

சிலாங்கூர் சிலம்ப வீரர் பிரதீஷ் அன்புச்செல்வன் தனிநபர் குத்துவரிசைப் பிரில் தங்கம் வென்றார். படம் - நடீரா பத்தா ( மீடியா சிலாங்கூர்)

மேலும், பெண்களுக்கான சிலம்பம் தனித்திறமை பிரிவில் சிலாங்கூரைச் சேர்ந்த கிரண்ஜெனிஃபர் டான்சில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

சிலாங்கூர் வீராங்கனை கிரன்ஜென்னிஃபர் டான்சில் தனித்திறமை கம்பு வீச்சுப் பிரிவில் வெண்கலம் வென்றார். படம் -நடிரா ஃபத்தா( மீடியா சிலாங்கூர்)

மற்றுமோர், சிலம்ப வீரர் சர்வேஷா முரளி , ஆண்களுக்கான தனிநபர் சிலம்பக் கம்பு வீச்சு ( தனித்திறமை) பிரிவில் , ஆறாவது இடத்தையே பிடித்ததை அடுத்து , அவர் பதக்கம் பெறத் தவறினார்.

சிலாங்கூர் வீரர் சர்வேஷா முரளி தனித்திறமை கம்புவீச்சுப் பிரிவில் ஆறாவது இடத்தையேப் பிடித்தார். படம் - நடிரா ஃபத்தா ( மீடியா சிலாங்கூர்)

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.