எல்லை பாதுகாப்பு தீவிரம்; தென் தாய்லாந்து பயணத்தைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்து

24 ஆகஸ்ட் 2026, 8:32 AM
எல்லை பாதுகாப்பு தீவிரம்; தென் தாய்லாந்து பயணத்தைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்து

மலாக்கா, ஆகஸ்ட் 24 - மலேசியா - தாய்லாந்து எல்லைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் மூன்று மாவட்டங்களில் உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் தீ வைப்பு சம்பவங்களை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு மலேசியர்கள் அதிகம் பயணிப்பதை அடுத்து , மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ மொஹம்மட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போதைக்கு பதற்றச் சூழல் நிலவும் அப்பகுதிகளை மலேசியர்கள் தவிர்ப்பதே சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா, ஆயெர் கெரோ, ஸ்ரீ நெகிரியில் மாநில யாங் டிபெர்துவா-வின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முன்னதாக , அச்சடங்கில் டான் ஸ்ரீ மொஹம்மட் காலிட் இஸ்மாயிலுக்கு, டத்தோ ஸ்ரீ பட்டத்தைக் கொண்டு வரும் 'கெமிலாங் ஸ்ரீ மலாக்கா' ( Gemilang Seri Melaka) விருது வழங்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.