ஷா ஆலம், ஆகஸ்ட் 24 : சுக்மா குறித்த சிறப்பு விடுமுறை ஏதும் அறிவிக்கப்படாததால் இன்று ஆகஸ்ட் 24 -ஆம் தேதி ( திங்கட்கிழமை) சிலாங்கூர் மாநிலத்தில் வேலை நாளாகும்.
சுக்மா வெற்றியை அடுத்து இன்று ஆகஸ்ட் 24 -ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு பொய்யான தகவலைக் கொண்டப் பதிவு வைரலாகியுள்ளது.
அதையடுத்து அந்தப் பதிவை மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மறுத்திருக்கின்றார்.
சிறப்பு விடுமுறை குறித்து எந்தவோர் அறிவிப்பும் இன்று ( 24.08.2026) இரவு மணி 8-க்கு சுக்மா போட்டியின் நிறைவு விழாவின் போதே அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாநில விளையாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி, சுக்மாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக சிலாங்கூர் உருவெடுத்தால், சிறப்பு விடுமுறை வழகுவது குறித்து மாநில அரசு பரிசீலிக்குமெனக் கூறியிருந்தார்.
எனினும் அதன் தொடர்பான முடிவை, ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவாகியப் பின்னரே அது குறித்த எந்தவோர் அறிவிப்பும் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.







