ஜோகூர் பாரு, ஜூலை 12 - மாச்சாப் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி ,ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் முன்னிலையில் மாநில மெந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
தமது நியமன கடிதத்தைப் பெற்ற ஓன் ஹாபிஸ், புக்கிட் செரின் அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் தமது பொறுப்பினை ஏற்றார்.
நேற்று நடைபெற்ற 16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி 56 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றிப் பெற்று மூன்றில் இரு பெரும்பான்மையைப் பெற்றது.
48 வயதாகும் ஓன் ஹாஃபிஸ் 15,375 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமது மாச்சாப் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.
அவரது இந்த பதவியேற்பை அடுத்து, ஜோகூர் அரசாங்கம் நாளை அம்மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அனுசரிக்கப்படுமென அறிவித்தது.
நேற்றைய மாநிலத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஜோகூர் மக்களுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக ஓன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.






