சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளரானால் சிறப்பு விடுமுறை அளிக்க மாநில அரசு பரிசீலனை

23 ஆகஸ்ட் 2026, 8:04 AM
சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளரானால் சிறப்பு விடுமுறை அளிக்க  மாநில அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஆகஸ்ட் 23 - நாளை முடிவுறும் சுக்மா போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக சிலாங்கூர் வாகை சூடினால், சிறப்பு விடுமுறை வழங்குவது குறித்து மாநில அரசாங்கம் பரிசீலிக்கும்.

ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சுக்மா போட்டி வெற்றியடைய ஆதரவாக இருந்த மாநில மக்களின் அர்ப்பணிப்புக்கு நன்றியாக விடுமுறை வழங்கும் பரிந்துரை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரியின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுமென, விளையாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

சுக்மா முடிவுற்றப் பின் விளையாட்டாளர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நடைமுறையும் விரைவுப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டார்.

மாலை மணி 3 நிலவரப்படி, தனது பதக்க இலக்கையும் தாண்டி சிலாங்கூர் 85 தங்கப் பதக்கங்களைக் குவித்தது.

இன்னும் ஒன்றரை நாளில் , விளையாட்டாளர்கள் ஆட்டத்தில் கவனமுடன் இருந்து மேலும் பதக்கங்களைப் பெற்றுத் தருவார்கள் என மொஹ்ட் நஜ்வான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.