8 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்: ஜோஹன் செத்தியா 155 குறியீட்டை எட்டியது

23 ஆகஸ்ட் 2026, 2:42 AM
8 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்:  ஜோஹன் செத்தியா 155 குறியீட்டை  எட்டியது

ஷா ஆலம்,ஆகஸ்ட் 23 : இன்று காலை 8:15 மணி நிலவரப்படி, மலேசியா முழுவதும் மொத்தம் எட்டு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தர நிலையைப் பதிவு செய்துள்ளன.

அதே வேளை, 60 பகுதிகள் மிதமான பிரிவில் உள்ளன.

சரவாக்கில் ஐந்து இடங்களும், சிலாங்கூர், கெடா மற்றும் பேராக்கில் தலா ஓர் இடமும் ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்துள்ளன.

இதில் செரியன் 198, கூச்சிங் 185, ஸ்ரீ அமான் 178, சமரஹான் 177, சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா 155, சரிகேய் 128, கெடாவின் சுங்கை பட்டாணி 127 மற்றும் பேராக்கின் தைப்பிங் 116 ஆகிய அளவுகளைப் பதிவு செய்துள்ளன.

சில இடங்களில் காற்றின் தரம் சற்று மேம்பட்டதால், பல முக்கிய பகுதிகள் மிதமான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

சிலாங்கூரின் ஷா ஆலாம் 96 என்ற அளவையும், மலாக்காவின் புக்கிட் ரம்பாய் முன்பு இருந்த ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து குறைந்து 93 என்ற அளவையும் பதிவு செய்துள்ளன.

மேலும் புத்ராஜெயா 89, கோலாலம்பூர் 87, பெர்லிஸின் கங்கார் 84 மற்றும் ஜொகூரின் தங்காக்க் 84 ஆகிய அளவுகளில் உள்ளன.

அத்துடன் ஜொகூரின் பத்து பகாட் மற்றும் பாசிர் கூடாங் ஆகிய இரு இடங்களும் 83, சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயா 81 மற்றும் கிளாந்தானின் தானா மேரா சற்று தெளிவான நிலையாக 65 என்ற அளவையும் கொண்டுள்ளன.

பொதுவான வழிகாட்டுதலின்படி, காற்று மாசடைவுக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நன்று, 51 முதல் 100 வரை மிதமானது, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் 300க்கு மேல் இருந்தால் அது அபாயகரமானது எனக் கருதப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.