கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 — சரவாக், சிபுவில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
இதன் மூலம், இன்று காலை 9 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ள பகுதிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
மலேசிய காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, கூச்சிங்கில் அதிகபட்சமாக 167 என்ற IPU பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சமரஹான் 164, செரியான் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD Serian) 163, சரிகேய் 157, பிந்துலு 156, ஸ்ரீ அமான் 154, முகா 152, சிபு 131 மற்றும் சமலாஜு 126 என்ற அளவில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் 46 பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையில் இருப்பதாகவும், 13 பகுதிகளில் நல்ல நிலையில் இருப்பதாகவும் APIMS தரவுகள் காட்டுகின்றன.







