
ஷா ஆலம், ஆகஸ்ட் 22: 2026 சுக்மா விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் சிலாங்கூர் மாநிலம் 75 தங்கம், 57 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 183 பதக்கங்களைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உபசரணை அணியான இந்த மாநிலம், தனது 80 தங்கப் பதக்க இலக்கை அடைவதற்கு இன்னும் ஐந்து தங்கப் பதக்கங்களை மட்டுமே பெற வேண்டியுள்ளது.
இப்பட்டியலில் திரெங்கானு மாநிலம் 37 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து கூட்டரசு பிரதேசம் 35 தங்கப் பதக்கங்களுடனும் மற்றும் சரவாக் 34 தங்கப் பதக்கங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதன் மூலம் சிலாங்கூர் மாநிலம் 38 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலிடத்தில் மிக வலுவாகக் கால்பதித்துள்ளது.
சுக்மாவின் எட்டாவது நாளான இன்று பல்வேறு பிரிவுகளின் மூலமாக சிலாங்கூர் தனது பதக்க எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டது.
இன்று சிலம்பம், கராத்தே போட்டிகளும் நடைபெற்றன.













