அனைத்து 548 Selangorku Adiwarna வீடுகள் ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்தன

21 ஆகஸ்ட் 2026, 9:18 AM
அனைத்து 548 Selangorku Adiwarna வீடுகள் ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்தன
அனைத்து 548 Selangorku Adiwarna வீடுகள் ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்தன
அனைத்து 548 Selangorku Adiwarna வீடுகள் ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்தன

கோலா லங்காட், ஆகஸ்ட் 21: இங்குள்ள தஞ்சோங் 12 பகுதியில் அமைந்துள்ள 'ரூமா சிலாங்கூர்கு அடிவர்ணா' வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தின் 548 வீடுகளும் ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்தன.

கோத்தா ஸ்ரீ லங்காட் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிலாங்கூர் வீடமைப்பு-சொத்து வாரியத்தால் 100 விழுக்காடு 'ரூமா சிலாங்கூர்கு' வீடுகளாக கட்டப்பட்ட முதல் திட்டம் இந்த 'அடிவர்ணா' திட்டம் .

இந்த அடிவர்ணா திட்டம் 'வில்லாமண்ட்' (Villament) எனும் புதிய அமைப்பில் கட்டப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கலாச்சார வாரியத்தின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ புர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

இது 'வகை D' ரூமா சிலாங்கூர்கு திட்டத்தைச் சார்ந்தது; அதாவது, நிலம் சார்ந்த வீடு மற்றும் டவுன்ஹவுஸ் ஆகிய இரு சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய இரு அடுக்கு அடுக்குமாடி வீடாகும்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கலாச்சார வாரியத்தின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ புர்ஹான் அமான் ஷா , சிலாங்கூர் அடிவர்ணா திட்டத்தின் மாதிரி வீட்டைப் பார்வையிட்டார். படம் - மீடியா சிலாங்கூர்

கிராமப்புற அல்லது புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் டவுன்ஹவுஸ் போன்ற வீடுகளையே அதிகம் விரும்புகின்றனர். அவர்கள் வீட்டின் முன்னும் பின்னும் சிறிய முற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் மற்றும் வீட்டிற்கு அருகிலேயே 2 பிரத்தியேக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன," என்று இன்று தஞ்சோங் 12-இல் நடைபெற்ற 'அடிவர்ணா மாதிரி வீடு' திறப்பு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கலாச்சார வாரியத்தின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ புர்ஹான் அமான் ஷா , சிலாங்கூர் அடிவர்ணா திட்டத்தின் மாதிரி வீட்டைப் பார்வையிட்டார். படம் - மீடியா சிலாங்கூர்

இந்த வீடுகள் தரைத்தளத்தில் சுமார் 1,141 சதுர அடி பரப்பளவையும், மேல் தளத்தில் 1,432 சதுர அடி பரப்பளவையும் கொண்டுள்ளன.

இதன் விற்பனை விலை ஒரு வீட்டிற்கு RM290,000 ஆகும்.

இதன் வடிவமைப்பு சிறப்பம்சங்களில் 38 அடி அகலமான முகப்பு, இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம், தரைத்தள வீடுகளுக்கான பசுமைப் பின்வழிப்பாதை (Green backlane), மற்றும் மேல் தள வீடுகளுக்கான தனி படிக்கட்டு மற்றும் பால்கனி ஆகியவை அடங்கும்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கலாச்சார வாரியத்தின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ புர்ஹான் அமான் ஷா , சிலாங்கூர் அடிவர்ணா திட்டத்தின் மாதிரி வீட்டைப் பார்வையிட்டார். படம் - மீடியா சிலாங்கூர்

மேலும், இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் தொழுகையிடம், பல்நோக்கு மண்டபம், சிறுவர் விளையாட்டுத் திடல், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், சமூகத் தோட்டம் , நடைப்பயிற்சிப் பாதை மற்றும் பாதுகாப்புப் பணி போன்ற பல்வேறு வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதன் 2-ஆம் கட்டத் திட்டம் 804 வீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அது ஜூலை 2029-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (PNB) நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த ஒட்டுமொத்த மேம்பாட்டுத் திட்டம் 160 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டது.

முதல் கட்டத் திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 'கட்டிடம் நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழை' (CCC) பெறும் என்றும், அடுத்த ஆண்டு ஹரிராயா பண்டிகைக்கு முன்னதாக வீட்டின் சாவிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.