வாடகைக்குப் பின் வீட்டை வாங்கும் ''சிலாங்கூர் மக்கள் சொந்த வீடு திட்டம்'' வழிவகுக்கிறது

19 ஏப்ரல் 2026, 4:20 AM
வாடகைக்குப் பின் வீட்டை வாங்கும் ''சிலாங்கூர் மக்கள் சொந்த வீடு  திட்டம்'' வழிவகுக்கிறது

ஷா ஆலாம், ஏப்ரல் 19: 2016-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சேவா திட்டம் (Skim Smart Sewa), முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கீழ் வீடு வாங்கும் கொள்கையை நிறைவு செய்கிறது.

வீடு வாங்கும் வசதியற்றோருக்கு மலிவு விலையில் வாடகைக்கு விடுவதற்காக 2,430 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

"தற்போதுள்ள கொள்கை, வீடுகளைக் கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வாடகையிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறும் ஒரு வழிமுறையையும் வழங்குகிறது என்பதை இது காட்டுகிறது."

"‘ருமா சிலாங்கூர்க்கு’ மற்றும் ‘ஸ்மார்ட் சேவா திட்டம்’ போன்ற முயற்சிகளின் இணைப்பு, மக்கள் வாடகைக்கு இருந்து சொந்தமாக வீடு வாங்குவதற்கு வழிகளைத் திறக்கிறது," என்று அவர் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மலிவு விலையில் வாடகைக்கு குடியிருக்கவும், அதே நேரத்தில் அவர்கள் செலுத்திய வாடகையில் 30 விழுக்காட்டைத் திரும்பப் பெறுவதன் மூலம் பயனடையவும் இந்தத் திட்டம் உதவுகிறது என்று அவர் விளக்கினார்.

தஞ்சோங் செப்பாட் சட்டமன்ற உறுப்பினரான அவர், இந்தத் தொகை, சொந்தமாக வீடு வாங்குவதற்கான முன்பணம் அல்லது பிற தேவைகளுக்குப் பெரிதும் உதவும் என்றார்.

"அந்த வாடகைப் பணத்தில் 30 விழுக்காட்டை நாங்கள் அவர்களுக்குத் திருப்பித் தருகிறோம். அதை அவர்கள் வீடு வாங்குவதற்கான வழக்கறிஞர் கட்டணம், குடிபெயர்தல் அல்லது வேறு ஏதேனும் தேவையான செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியத்தால் (LPHS) நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டம், RM450 முதல் RM700 வரையிலான மாதாந்திர வாடகையில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு 'ருமா சிலாங்கூர்க்கு' வீடுகளை வாங்குவதற்கு LPHS முன்னுரிமை அளிக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.