ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 - புகை மூட்டம் காரணமாக சரவாக்கின் 6 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்றும் நாளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டது.
கூச்சிங்,படாவான், பாவு, லுண்டூ, செரியான், சமாராஹான் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாநில கல்வித் துறை தெரிவித்தது.
மாசடைந்த காற்றிலிருந்து மாணவர்கள், பள்ளி தரப்பினர் ஆகியோரின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதிச் செய்ய அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக , அத்துறை அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வீட்டிலிருந்தவாறே மேற்கொள்ளப்படுமெனவும் அத்துறை குறிப்பிட்டது.
சம்பந்தப்பட்ட 6 மாவட்டங்களிலும் இன்று காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியது.
தற்போது அண்டை நாடானா இந்தோனேசியா, களிமந்தானில் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயினால் எல்லைக் கடந்த புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.







