சுக்மா 2026: 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிய சாதனை – இறுதிச்சுற்றுக்கு எலிசா தேர்வு

20 ஆகஸ்ட் 2026, 5:17 AM
சுக்மா 2026: 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் புதிய சாதனை – இறுதிச்சுற்றுக்கு எலிசா தேர்வு

ஷா ஆலாம், ஆகஸ்ட் 20: சுக்மா 2026 போட்டியில், சிலாங்கூர் நீச்சல் வீராங்கனை எலிசா தான் ஐ ஷென், மகளிர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தகுதிச் சுற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றில், நான்காவது தடத்தில் களமிறங்கிய 19 வயதான எலிசா, 57.03 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம், இதற்கு முன்னர் 58.10 வினாடிகளாக இருந்த சுக்மா போட்டியின் சாதனையை அவர் முறியடித்தார்.

இந்த சிறப்பான நேரப் பதிவின் மூலம் எலிசா, இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மகளிர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

சுக்மா போட்டியில் தனது முதல் பங்கேற்பிலேயே எலிசா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுடன், அந்தப் போட்டியில் 2 நிமிடம் 05.26 வினாடிகளில் இலக்கைத் தொட்டு தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தையும் பதிவு செய்திருந்தார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.