கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 — இன்று முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை மானியமற்ற எரிபொருள் விலைகள் லிட்டருக்கு 10 சென் முதல் 20 சென் வரை அதிகரித்துள்ளன.
RON97 பெட்ரோல் விலை 10 சென் உயர்ந்து லிட்டருக்கு RM4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மானியமற்ற RON95 பெட்ரோல் விலை 15 சென் அதிகரித்து லிட்டருக்கு RM3.77 ஆக உள்ளது.
மேலும், மானியமற்ற டீசல் விலை 20 சென் உயர்ந்து லிட்டருக்கு RM4.67 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு RM1.99க்கும், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு RM2.10க்கும் விற்பனை செய்யப்படும்.
நாட்டின் எரிபொருள் விநியோகம் மற்றும் மானியச் செலவினத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.







