சுக்மா 2026: ஸ்குவாஷ் போட்டியில் சிலாங்கூருக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் நிகிலேஸ்வர்

18 ஆகஸ்ட் 2026, 9:12 AM
சுக்மா 2026: ஸ்குவாஷ் போட்டியில் சிலாங்கூருக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் நிகிலேஸ்வர்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 18 - சுக்மா 2026-இல் ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் சிலாங்கூர் அணியின் வீரர் நிகிலேஸ்வர் மோகனசுந்தரம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிகிலேஸ்வர், இறுதிச்சுற்று வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் சிலாங்கூர் அணிக்காக வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்து பெருமை சேர்ந்துள்ளார்.

நிகிலேஸ்வர் மோகனசுந்தரம்

இப்போட்டியில் பேராக் அணியின் லோ வா சேர்ன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் ராசிக் புத்ரா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.நிகிலேஸ்வர் மோகனசுந்தரம்

நிகிலேஸ்வர் மோகனசுந்தரத்தின் இந்தச் சாதனை, சிலாங்கூர் ஸ்குவாஷ் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக அமைந்துள்ளது.

19 வயதான இந்த இளம் நட்சத்திர வீரர், அமெரிக்க ஜூனியர் பொது போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றியாளர் பட்டம் வென்ற முதல் மலேசியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஆவார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.