கிள்ளானில் கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைக்குத் திட்டம்

17 ஆகஸ்ட் 2026, 4:21 PM
கிள்ளானில் கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைக்குத் திட்டம்
கிள்ளானில் கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைக்குத் திட்டம்
கிள்ளானில் கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைக்குத் திட்டம்

ஷா ஆலாம்,ஆகஸ்ட் 17 : கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK), வீதிகளில் கைவிடப்பட்ட மற்றும் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடன் (NGO) இணைந்து கருத்தடை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

கிள்ளான் மாநகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கைக்கு திட்டமிட்டிருப்பதாக, அம்மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் ஹுசைன் தெரிவித்தார்.

நாய்களைப் பிடித்து , கருத்தடை செய்து பின்னர் விடுவிக்கும் அணுகுமுறையை கிள்ளான் மாநகர் மன்றம் கடைப்பிடிக்கும்.

இதில் கருத்தடை செய்வதற்கான செலவை அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஏற்கும்.

அதே நேரத்தில் கிள்ளான் மாநகர் மன்றம் , கருத்தடை நடைமுறை முடியும் வரை விலங்குகளுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்.

இதனிடையே, கருத்தடை செய்யப்படும் இந்த பிராணிகளை மீண்டும் வீதிகளில் விடுவிப்பதற்குப் பதிலாக, மக்கள் அவற்றை வளர்ப்புப் பிராணிகளாகத் தத்தெடுப்பதற்கு அரசாங்க சார்பற்ற அமைப்புகள் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

கிள்ளான் பகுதியில் சுமார் 11,000 சுற்றித் திரியும் நாய்கள் உலா வருகின்றன. இதனால் பொதுமக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருகின்றன.

அதையடுத்து, கிள்ளான் மாநகர் மன்றத்தின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பயிற்சி பெற்ற ஊழியர்கள், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து சுற்றித் திரியும் நாய்களைப் பாதுகாப்பாகப் பிடித்து தங்களின் தங்குமிட மையத்தில் அடைப்பதை உறுதி செய்வார்கள்.

"இந்த் பிராணிகள் புதிய வீடுகளைப் பெறுவதற்காக, மக்கள் இவற்றைத் தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

மேலும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட விலங்கு நல முயற்சிகளின் மூலம் 430 நாய்களுக்கும் 18 பூனைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு , ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 2,125 நாய் உரிமங்கள் (dog licenses) வழங்கப்பட்டுள்ளன.

தற்போது கிள்ளான் மாநகர் மன்றம், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள புலாவ் இண்டா பகுதியில் சுமார் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பீட்டில் சுற்றித் திரியும் நாய்களுக்கான தங்குமிடத்தைக் கட்டி வருகிறது.

தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கும் இந்த தங்குமிடம் சுற்றித் திரியும் அல்லது கைவிடப்பட்ட நாய்களுக்குப் புகலிடமாக விளங்கும்.

இது புலாவ் இண்டா தொழிற்பேட்டையில் 2.5 ஹெக்டேர் பரப்பளவிலான முக்கோண வடிவிலான நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது," என்று அவர் கூறினார்.

இந்த மையத்திற்கு கொண்டு வரப்படும் நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும், உரிமம் பெறாத நாய்கள் தொடர்பான புகார்களுக்கு இதன் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

"பொதுமக்கள் இந்த மையத்திற்கு வந்து, கருத்தடை செய்யப்பட்ட விலங்குகளைத் தத்தெடுப்பதை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம்," என்றும் டத்தோ அப்துல் ஹமித் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.