கோலாலம்பூர், செப் 8 - செராஸின் பத்து 9 இல் தெருநாய் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறு வயது சிறுவனுக்கு புதன்கிழமை இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
புத்ராஜெயா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகக் காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
“ரேபிஸ் தொற்றுக்கான சோதனைகளை நடத்தி, ஆரம்ப சிகிச்சையையும் மருத்துவமனை வழங்கியுள்ளது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்ட நாய் ஒரு தெரு நாய் என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.