அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக RM1 மில்லியன் ஒதுக்கீடு — பிரதமர் அறிவிப்பு

16 ஆகஸ்ட் 2026, 9:37 AM
அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக RM1 மில்லியன் ஒதுக்கீடு — பிரதமர்  அறிவிப்பு

ஆயர் கெரோ, ஆகஸ்ட் 16 — நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக RM1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

எனினும், இந்தக் கூடுதல் நிதி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழியாக நேரடியாக விநியோகிக்கப்படாது.

அந்தந்த தொகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்புடைய அரசாங்க நிறுவனங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிதி மூலம் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கு விரைவாகத் தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, RON95 பெட்ரோலுக்கான லிட்டர் மானியத்தை அதிகரிப்பது மற்றும் டீசல் உதவியை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளையும் அரசாங்கம் பரிசீலிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.