ஷா ஆலம், ஆகஸ்ட் 15 — போர்ட் கிள்ளான், ஜாலான் பெரிங்கின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் 1.24 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்தபோது, சுமார் 5 ஏக்கர் அளவில் தீ பரவியிருந்தது கண்டறியப்பட்டதாக அஷ்ருல் ரீசால் குறிப்பிட்டார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கையில் போர்ட் கிள்ளான் மற்றும் ஸ்ரீ அண்டாலாஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.







