செர்டாங், ஆகஸ்ட் 30: தாமான் புக்கிட் செர்டாங்கில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 1.51 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
பிற்பகல் 3.15 மணி நிலவரப்படி சுமார் 80 விழுக்காடு தீ அணைக்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய 20 விழுக்காடு தீயையும் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.







