கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 — கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் காணாமல் போன மலாக்கா, அலோர் காஜா MRSM கல்லூரியின் இரு மாணவிகள், கோலாலம்பூர் பசார் செனி பகுதியில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
தற்போது இரு மாணவிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காணாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் விசாரணையைப் போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, MARA தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வஜ்டி டுசுக்கி, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவின் மூலம் இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதற்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.







