கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 — சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இதனை தெரிவித்துள்ளார்.
தமது உடல்நலம் விரைவாகக் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் பிரதமர் அன்வார் தனது நன்றியைத் முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் அன்வார் திங்கட்கிழமை குடலிறக்கப் பிரச்சனைக்காக (para-umbilical hernia) லேப்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்குப் பின்னர் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







