புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

12 ஆகஸ்ட் 2026, 2:40 AM
புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 — புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. புத்ராஜெயாவில் 104 ஆகவும், கோலாலம்பூரில் 101 ஆகவும் IPU அளவு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், சரவாக், செரியான் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் நீடித்து வருகிறது.

இன்று காலை 8.47 மணி நிலவரப்படி, செரியானில் IPU அளவு 194 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்று பதிவான 190 என்ற அளவைவிட சற்று அதிகமாகும். சரவாக்கில் மேலும் எட்டு கண்காணிப்பு நிலையங்களிலும் IPU அளவு ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது

கூச்சிங்கில் 172, சமரஹானில் 170, சரிக்கேயில் 161, பிந்துலுவில் 157, ஸ்ரீ அமானில் 157, சமலாஜுவில் 152, சிபுவில் 151 மற்றும் மிரியில் 133 என்ற அளவில் IPU பதிவாகியுள்ளது.

எல்லை தாண்டிய புகைமூட்டத்தின் தாக்கம் காரணமாக, தீபகற்ப மலேசியவில் மொத்தம் 52 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் பெரிய அளவில் காட்டுத் தீ தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக மேற்கு கலிமந்தானில் கடுமையான புகைமூட்டம் நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டை நாடுகளைப் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டிய புகைமூட்டம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கம் தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றுத் தரத்தைப் பொறுத்தவரை, பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான IPU அளவு நல்ல நிலையில் இருப்பதையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும் குறிக்கிறது.

101 முதல் 200 வரையிலான அளவு ஆரோக்கியமற்றதாகவும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் கருதப்படுகிறது. 300-க்கும் அதிகமான IPU அளவு ஆபத்தானதாக வகைப்படுத்தப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.