கொலம்பியா நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் — விஸ்மா புத்ரா

12 ஆகஸ்ட் 2026, 1:44 AM
கொலம்பியா நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் — விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 — கடந்த திங்கட்கிழமை கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவர்களின் நிலை குறித்த தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியத் தூதரகம், அங்குள்ள நிலவரத்தை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொலம்பியா அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் மலேசிய வெளியுறவு அமைச்சு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் வசிக்கும் அல்லது அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு விஸ்மா புத்ரா கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளையில், கொலம்பியாவில் தங்களை இதுவரை பதிவு செய்யாத மலேசியர்கள், உடனடியாக e-Konsular வழியாக தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தூதரகத்தை (511) 422 0297, (511) 441 1939 அல்லது (511) 441 0795 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். மேலும், mwlima@kln.gov.my அல்லது malawakillima@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்புகொள்ள முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.