ஷா ஆலம், செப்.4 : வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்கள் நாளை கிள்ளான் ஹம்சா மண்டபத்தில் நடைபெறவுள்ள சிலாங்கூர் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொண்டு பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு சந்தை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும்.
மேலும். இது வேலை தேடுபவர்கள் காலியிடங்கள் தொடர்பான தகவல்களை பெறுவதுடன், நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்களே முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வேலை தேடும் நபர்களுக்கு இந்த நிகழ்வை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.










