ஆகஸ்ட் 30, காஜாங் அரங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம்

11 ஆகஸ்ட் 2026, 5:44 PM
ஆகஸ்ட் 30, காஜாங் அரங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 11 : வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி காஜாங் அரங்கில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இக்கொண்டாட்டம் மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 வரை நடைபெறும்.

இதில் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கவரும் வகையில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

வண்ணமயமான அணிவகுப்புகள், சீருடைப் படையினரின் சிறப்புக் காட்சிகள், கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி ஆகியவை இந்த கொண்டாட்டத்தின் முக்கிய அங்கங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இரவு நேரத்தின் உச்சக்கட்ட நிகழ்வாக நாட்டின் பிரபல உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்தத் திட்டம், 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மக்களிடையே தேச பக்தியையும் நாட்டுப் பற்றையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மாநில அரசாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொண்டாட்டம் குறித்த கூடுதல் விவரங்களை சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.