நட்டக் குற்றச்சாட்டை மறுத்தது PKNS; நிதி நிலைமை வலுவாக உள்ளதாக விளக்கம்

10 ஆகஸ்ட் 2026, 3:38 PM
நட்டக் குற்றச்சாட்டை மறுத்தது PKNS; நிதி நிலைமை வலுவாக உள்ளதாக விளக்கம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 10 : சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS), RM103.69 மில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், RM6.1 பில்லியன் வரை கடன் சுமையைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படும் ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது.

கழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அந்த அவதூறுகள் துல்லியமற்றவை, தவறாக வழிநடத்தக்கூடியவை மற்றும் PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என அக்கழகம் குறிப்பிட்டது.

மேலும் ‘ரேம் ரேட்டிங்ஸ்’ (RAM Ratings) அமைப்பின் சுயேட்சை மதிப்பீடு, PKNS- இன் நிதி நிலைமை தொடர்ந்து வலுவாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதோடு, ‘ரேம் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் PKNS-க்கான தனது ‘AA1/Stable/P1’ தரவரிசையை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

எனவே, PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலை மற்றும் நிதியளிப்பு கட்டமைப்பை விளக்காமல், நட்டம் மற்றும் கடன் தொகையை மட்டும் தனித்து மேற்கோள் காட்டுவது உண்மைகளையும் PKNS-இன் உண்மையான நிலவரத்தையும் பிரதிபலிக்காத ஒரு தவறான பார்வையை உருவாக்குவதற்கே வழிவகுக்கும் என அக்கழகம் கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.